ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் பரம பூஜனீய சர்சங்கசாலக் மோகன்ஜி பாகவத் விவேக் ஹிந்தி மாத இதழுக்கு அளித்த சிறப்பு நேர்காணலின் சாராம்சம் வருமாறு:
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணி தொடங்கியதுடன் ராம ஜென்ம பூமி இயக்கம் முடிவுக்கு வந்துவிட்டது. ராமபிரானை எதனடிப்படையில் முன்னிறுத்தினோமோ அதுவும் முடிவுக்கு வந்துவிட்டதா?
1989ம் ஆண்டிலேயே ராமர் கோயில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுவிட்டது. 2020 ம் ஆண்டு ஆகஸ்டு 5ம் தேதி ராமர் கோயில் கட்டுமானப்பணி ஆரம்பமாகிவிட்டது. ராமஜென்ம பூமியை மீட்பதற்காக இயக்கம் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வந்தது. உச்ச நீதிமன்றம் சாதகமான தீர்ப்பை வழங்கியது. அதன் வழிகாட்டுதல்படி அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளையிடம் நிலம் ஒப்ப டைக்கப்பட்டுவிட்டது. இப்போது கட்டுமானப்பணியும் தொடங்கிவிட்டது. ராமர் கோயிலுக்கான இயக்கம் நிறைவுற்று விட்டது. ஆனால் ராமபிரானை எதற்காக முன்னிறுத்தினோமோ அதற்கான காரணம் தொடர்ந்து நீடித்துவருகிறது. இது ஒருபோதும் முடிவுக்கு வராது. பாரத மக்களில் பெரும்பாலானோர் கடவுளாக ராமபிரான் உள்ளார். மற்றவர்களுக்கும் நேர்மையின் உருவமாக ராமபிரான் காட்சியளிக்கிறார். பாரதத்தின் புண்ணிய புருஷன் ராமபிரான். கடந்தகாலம் நமது நிகழ்காலத்தின் மீதும் எதிர்காலத்தின் மீதும் தாக்கம் செலுத்துவது இயல்பானது. எனவே ராமநாமம் என்றென்றும் தொடர்ந்து நீடிக்கட்டும்.
இதைப்போல காசி விஸ்வநாதர் ஆலயத்தை மீட்பதற்காகவும் மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்பதற்காகவும் இயக்கம் தொடங்கப்படுமா?
எங்களுக்கு இதுகுறித்து எதுவும் தெரியாது. இதைத் தொடங்குவது எங்கள் நோக்கமல்ல. ராமஜென்ம பூமி இயக்கத்தையும் நாங்கள் தொடங்கவில்லை. சமூகமே இந்த இயக்கத்தை முன்னெடுத்தது. அசோக் சிங்கல் ஜி விஸ்வ ஹிந்து பரிஷத்தின் பொறுப்பை ஏற்பதற்கு முன்பே மக்களால் இயக்கம் தொடங்கப்பட்டுவிட்டது. அசா தாரண சூழ்நிலையில் இந்த இயக்கத்தோடு நாங்கள் தொடர்பு வைத்துக்கொண்டோம். ஒரு நிகழ்ச்சி நிரலை உருவாக்கியதற்காக இயக்கத்தை தொடங்குவது எங்களது வேலை யல்ல. மக்களின் நெஞ்சங்களில் மாற்றங்களை ஏற்படுத்தவும் பண்புப் பதிவுகளை வலுப்படுத்தவும் அமைதியாக பணியாற்றுவதே எங்களது வழிமுறை. எதிர்காலத்தில் ஹிந்து சமூகம் எத்தகைய நடவடிக்கை எடுக்கும் என்பதை இப்போதே என்னால் சொல்லமுடியாது. இதற்கு காலம்தான் பதில் சொல்லும். இத்தருணத்தில் நான் எதையும் கூற விரும்பாவிட்டாலும் கூட ஒன்றைமட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். எந்த இயக்கத்தையும் நாங்கள் தொடங்கமாட்டோம் என்பதுதான் அது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டிமுடிக்கப் பட்ட பிறகு அங்கு சடங்குகளும் வழிபாடு களும்தான் நடக்குமா? அல்லது அதற்கு அப்பாலும் நடவடிக்கைகள் நடைபெற வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கிறீர்களா?
நம்நாட்டில் சடங்குகளுக்காக ஏராளமான கோயில்கள் உள்ளன. இதற்காக ஹிந்து சமூகம் நீண்ட நெடியகாலத்துக்கு போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியதில்லை. நம்மக்களின் அறப்பண்புகளையும் நல்ல அம்சங்களையும் அழிக்கவே இந்த கோயில்களை தகர்த்தனர். இதனால்தான் இந்த கோயில்களையெல்லாம் புனர் நிர்மாணம் செய்ய ஹிந்து சமூகம் முற்பட்டது. சுதந்திரத்திற்கு பிறகு இவ்வாறு பல கோயில்கள் புனர் நிர்மாணம் செய்யப்பட்டன. ஆனால் குறியீடு மட்டும் போது மானதல்ல. நமது பண்புப் பதிவுகளுக்கான சான்றுகளாக கோயில்கள் விளங்குகின்றன. நான் ஆகஸ்டு 5ம் தேதி அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் பூமிபூஜையின் போது குறிப்பிட்டதைப் போல பண்புப் பதிவுகளை நிலைநாட்டுவதற்காகவே ஆலயங்கள் உள்ளன. உலகின் குருவாய் பாரதம் உயர்ந்தோங்க வேண்டும். இதற்கான ஆற்றல் படைத்தவராக ஒவ்வொரு வரும் உயர்ந்தோங்கவேண்டும். எனவேதான் இதற்கு முக்கி யத்துவம் அளிக்கிறோம். ஒவ்வொரு வரின் உள்ள த்திலும் இது ஆழமாக பதிய வேண்டும். அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடிக்கப்படும்போது நம் நெஞ்சங்களிலும் இந்தப் பதிவு மிளிரவேண்டும். நான் ராம சரித மானஸ்ஸில் உள்ள இரண்டு பாடல்களை சுட்டிக் காட்டினேன்.
காமம், கோபம், அகங்காரம், தற்பெருமை, உடைமை வேட்கை, அளவுக்கதிமான ஆசை, உணர்ச்சி கொந்தளிப்பு, ஈர்ப்பு, மிகையான பற்று இல்லாதவர்களின் குறிப்பாக, மோசடி சந்தர்ப்பவாதம் ஏமாற்று ஆகியவற்றிலிருந்து விடுபட்டவர்களின் நெஞ்சங்களில் ரகுராமன் நீக்கமற வாசம் செய்கிறார். ஸ்ரீ ராமனின் பண்புகளை உள்ளத்தில் வரித்துக் கொண்டவர்கள் பாக்கியசாலிகள். பாரதியர் ஒவ்வொருவரின் நெஞ்சமும் இவ்வாறு மாறவேண்டும் என்பதே முதலாவது பாடல்.
ஜாதி, செல்வம், மதவெறி, குடும்பப்பற்று ஆகியற்றை விட்டொழித்தவர்களின் நெஞ்சங் களில் ரகுராமன் வாசம் செய்கிறார். அதுவே மகிழ்ச்சி ததும்பும் இடம்.
ஜாதியும் மதமும் இருக்கலாம். இவை தரும் பெருமை அர்ப்பத்தனமானது. இதை சமூக பகைமைக்கு பயன்படுத்தக்கூடாது. சுயநலத்துக்காக பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு பயன்படுத்தினால் நாசம் விளையும். இவற்றையெல்லாம் விட்டுவிடு என்றால் சந்நியாசம் வாங்கிக்கொண்டு இமயமலைக்கு செல்லவேண்டும் என்று பொருளல்ல. இவற்றை விட்டுவிட்டு ராமபிரான் அடிச்சுவட்டில் வாழவேண்டும் என்பதே பொருள். இதுவே நமது லட்சியமாக இருக்கவேண்டும். இராமபிரான் லட்சியப் புருஷர். அவர் நமக்கெல்லாம் முன்னோடி. இது தொடர்பான விழிப்புணர்வு நாடுமுழு வதும் ஏற்படவேண்டும். இந்த உணர்வு மதிக்கப்படவேண்டும். நம்நாட்டில் சடங்கு களுக்காகவும் வழிபாட்டிற்காகவும் பல கோயில்கள் உள்ளன. ராமர் கோயிலை தரைமட்டமாக ஆக்கியதன் மூலம் நம்மை அவமானப்படுத்தினார்கள். இந்த இழிவைப் போக்குவதற்காகவே ராமர் கோயிலை மறுபடியும் கட்ட விரும்பினோம். இது இப்போது நனவாகி வருகிறது.
ராமபிரானை லட்சியப்புருஷராக கொண்டாடினாலும் கூட சமூகத்தில் பல தீமைகள் காணப்படுகின்றன. இவற்றுக் கெல்லாம் முடிவுகட்ட நாம் என்ன செய்ய வேண்டும்? இதற்காக தர்மாச்சாரியர்கள் என்ன செய்ய வேண்டும்?
தர்மாச்சாரியார்களுக்கு நான் ஆலோசனை சொல்லமுடியாது. அவர்கள் தங்கள் வழியில் பங்களிப்பை நல்குவார்கள். ஆனால் சமூகம் என்ன செய்யவேண்டும். அதன் செயல்பாடு எவ்வாறு இருக்கவேண்டும் என்பது குறித்து கவனிக்கலாம். இதில் தர்மத்துக்கு முக்கியபங்குண்டு. இந்த அறப்பண்புகள் ஒருபோதும் அழியாதவை. சத்தியம், அகிம்ஷை, அஸ்தேயா, பிரமச்சார்ய, அபரிகிரக, சவுஜ் சுவாதேய, சந்தோஷ் தபம் ஆகியவை, நிரந்தரமான நல்லரங்கள். இவை எக்காலத்துக்கும் எல்லா இடங்க ளுக்கும் பொருத்த மானவை. தேசம் காலம், ஆகியவற்றுக்கு ஏற்ப இவற்றை பிரயோகிக்க வேண்டும். ஒவ்வொரு தனி நப ரின் ஒழுக்கத்தையும் பொருத்து இது உள்ளது. இதை ஆச்சார்யா தர்மர் விவரித்துள்ளார். பல ஸ்மிருதிகள் இவற்றை எடுத்தெரிந்துள்ளன. அவை தேக்க நிலையில் உள்ளவையல்ல. மாறிக்கொண்டே இருக்கக் கூடியவை. தேவல் ஸ்மிருதிதான் கடைசி ஸ்மிருதி. அதில் பெண்களின் கல்வி உள்ளிட்ட பல அம்சங்கள் வரையறை செய்யப்பட்டுள்ளன. 10ம் நூற்றாண்டில் தேவல் ஸ்மிருதி முடிந்துவிட்டது. அதன்பிறகு 1000 ஆண்டுகள் கடந்துவிட்டன. எனினும், வேறு புதிய ஸ்மிருதி எதுவும் வரவில்லை. சமூகத்தை மதிப்பீடு செய்து தேவைக்கு ஏற்ப விதிமுறைகளை வகுக்கவேண்டியுள்ளது. இது பாரதீயர்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கவேண்டும். தொன்மையின் சிறப்பு மாறாமல் நிகழ்காலத்துக்கு ஏற்ப அமலாக்க வேண்டும். தர்மாச்சார்யார்கள் இதனடிப்படையில் நிச்சயமாக பங்களிப்பு நல்க முடியும்.
ராமர் கோயில் ஹிந்து தர்மத்தைச் சேர்ந்த பல்வேறு பிரிவினரை ஒருங்கிணைத்து சமூகத்தை வலுப்படுத்துகிறது. ஆனால் நம்நாட்டில் கிறிஸ்தவம், இஸ்லாம் போன்ற மதங்களும் உள்ளன. இத்தகைய மதங்களைச் சேர்ந்தவர்களெல்லாம் பொது நீரோட்ட சிந்தனையில் சங்கமிக்கவைக்க என்ன செய்ய வேண்டும்?
அவர்கள் கொண்டுவந்தது என்ன? அதன் அடிப்படையில் செயல்பாடு இருக்க வேண்டும். பிறழ்வு தேவையில்லை. ரஸ்கன் ஒரு முஸ்லிம். அவர் இஸ்லாமை கைவிட வில்லை. ஆனால் அவர் பகவான் கிருஷ்ணரை கவிதை வாயிலாக புகழ்ந்துள்ளார். அவர் கிருஷ்ண பக்தர். ஷேக் முகமதின் பணியையும் நம்மால் மறக்கமுடியாது. இவயெல்லாம் மிகவும் பழமையான கதைகள் என்று கருதவேண்டியதில்லை. இஸ்லாம், கிருஸ்தவம் போன்றவையும் வழிபாட்டை பின்பற்று கின்றன. எல்லா மதங்களும் ஒரே இலக்கையே கொண்டிருக்கின்றன என்று பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறினார்.
ஸ்ரீ ரமண மகரிஷியிடம், ‘‘நான் ஹிந்துவாக மாற விரும்புகிறேன்” என்று பால் பிரிண்டன் கூறியபோது, அதற்கு ஸ்ரீ ரமண மகரிஷி, ‘‘தேவையில்லை. நீ கிறிஸ்தவனாக பிறந்துள்ளாய். நீ சிறந்த கிறிஸ்தவனாக இருந்தால் போதுமானது. நல்ல ஹிந்து எதை அடைவாரோ அதை நீயும் அடையமுடியும்’’ என்று கூறினார். கடுமையான நிலைப்பாடு கொண்டவர்கள் மக்களை திசைதிருப்ப முயலுகிறார்கள். இத்தகைய முயற்சிகளை சத்திரபதி சிவாஜி முறியடித்தார். அவரது ராணுவத்தில் முஸ்லிம்களும் சித்திகளும் இடம்பெற்றிருந்தனர். இதைப்போல மகாராணா பிரதாப் சிங்கின் ராணுவத்தில் முஸ்லிம்கள் இடம் பெற்றிருந்தனர். அவர்கள் ஹால்டிஹத்தியில் அக்பரைத் தடுத்து நிறுத்தினார்கள். மக்கள் நாட்டுக்காக ஒற்றுமையாக பாடுபட்டுள்ளனர் என்பதை வரலாறு சுட்டிக்காட்டுகிறது. பாரதம் மீதான பக்தி தழைக்கும்போது நமது பண்பாட்டுப் பெருமை மேலோங்குகிறது. வேற்றுமைகெல்லாம் மறைந்துவிடுகின்றன. சுயநலவாதிகள்தான் பிரிவினை வாதத்தையும் மதவெறியையும் பரப்புகின்றனர். அனைவரும் ஒருங்கிணைந்து வாழ்ந்த மகத்தான பூமியிது. பாரதத்தில்தான் மன நிறைவு கொண்ட முஸ்லிம்கள் பெருமளவில் உள்ளனர். உலகில் வேறெந்த நாட்டிலும் இந்த அளவுக்கு மனநிறைவுடன் முஸ்லிம்கள் இல்லை. அந்நிய மதம் ஆதிக்கம் செலுத்திய வேறு எந்த நாட்டிலும் இத்தகைய நிலையை பார்க்க முடியாது.
இஸ்லாமிய ஆக்கிரமிப்பு தொடங்குவதற்கு முன்பே இந்தியாவில் முஸ்லிம்கள் சிலர் வந்துவிட்டனர். படை யெடுப்பின்போது ஏராளமா னோர் இருந்தனர். ரத்தக்களரி யுத்தம், பகைமை எல்லாம் அரங்கேறின. இருப்பினும் இங்கு முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் உள்ளா ர்கள். மதத்தின் பெயரால் அவர்களுக்கு யாரும் தீங்கிழைப்பதில்லை. அவர்களுக்கு இங்கு அனைத்து உரிமைகளும் உள்ளன. ஆனால் அதே நேரத்தில் பாகிஸ்தானில் ஹிந்துக்களுக்கு இத்தகைய உரிமைகள் இல்லை. முஸ்லிம்களுக்கு தனிநாடு வேண்டும் என்பதற்காக பாரதத்தில் இருந்து பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது. ஆனால் நமது அரசியல் சாஸனத்தில் இங்கு ஹிந்துக்கள் மட்டுமே வாழவேண்டும், வேறு யாரும் வாழக் கூடாது, என்று கூறப்படவில்லை. நீங்கள் வெளியேற வேண்டுமானால் தாராளமாக வெளியேறுங்கள். இங்கே தங்கியிருக்க விரும்பினால் இங்கேயே தங்கியிருங்கள் என்று மன விசாலத்துடன் முன்னோர்கள் செயல்பட்டனர்.
நமது அரசியல் சாஸன தலைவர்கள் எல்லா தரப்பினர் பிரதியினரும் அங்கு அங்கம் வகித்தார்கள். எல்லா முஸ்லிம்களையும் பாகிஸ்தானுக்கு அனுப்பவேண்டும் என்ற தொனியில் டாக்டர் பாளாசாகேப் அம்பேத்கர் கூட கருத்து தெரிவித்தார். ஆனால் அரசியல் சாஸனத்தில் அவர் அவ்வாறு அறிதியிட்டு உரைக்கவில்லை. இதுதான் நம்தேசத்தின் இயல்பு. ஹிந்துக்களின் சுபாவம் இத்தகையதுதான். நீங்கள் யாரை வேண்டுமானாலும் வணங்குங்கள். இங்கு ஒருவரோடு ஒருவரை பிணைப்பது தர்மம்தான். உலக ரீதியான நிறைவையும் மனரீதியான நிறைவையும் தருவது தர்மம் மட்டுமே. செல்வத்தையும் காமத்தையும் ஒழுங்குபடுத்துவது அறமே. ராஜதர்மம் வழிபாடு சார்ந்தது அல்ல. பாகிஸ்தான் பற்றிய பேச்சு உச்சமடைந்த வேளையில் ஜமாத் – இ – இஸ்லாமியின் தலைவராக மௌதூதி சாகிப் இருந்தார். அவர் தனது புத்தகத்தில் தேசத்துக்கும் மதத்துக்கும் தொடர்பில்லை என்று அறிவித்தார். முஸ்லிம் கள் ஹிந்துஸ் தானைச் சேராதவர்கள் என்பது சிலரின் தவறான வாதம் என்று அவர் பதிவு செய்துள்ளார். எனவே, குறுகிய மனோபாவம் நமக்கு அந்நியமானது. நம் தொன் மையான தேசம் ஒரேநாடாகவே இருக்கும்; இருக்கவேண்டும். நம் ஹிந்து தேசம் அறப்பண்புகளின் உறவிடமாக விளங்கும். இதில் எந்த மாற்றத்தையும் செய்யத் தேவையில்லை. நன்கு கல்வி கற்ற தெளிவுபெற்ற கிறிஸ்தவர் களும் முஸ்லிம்களும் இதை உணர்ந்துள்ளனர்.
எதிர்கால பாரதம் பற்றி விவாதிக்கும்போது உலகின் குருவாய் பாரதம் விளந்தோங்க வேண்டும் என்பது குறித்து சர்ச்சை எழுகிறது. சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ குருஜி உள்ளிட்டோர் உலகின் குருவாய் பாரதம் உயர்ந்தோங்கவேண்டும் என்பதை எடுத்துரைத்துள்ளனர். தற்போதைய சூழ் நிலையில் இது மற்ற சிறிய நாடுகளை தாழ்த்துவதாக இருக்காதா? பொருளாதாரத்தை பயன்படுத்தி அவர்களை வளைப்பதாக இருக்காதா?
நாம் யார் மீதும் ஆதிக்கம் செலுத்த விரும்பவில்லை. நாம் நில ரீதியான விரிவாக்கத்தில் நாட்டம் கொண்டவர்கள் கிடையாது. நாம் நிலப்பரப்பை வெல்ல விரும்பவில்லை. மக்களின் நெஞ்சங்களையே வெல்ல விரும்புகிறோம். இதைத்தான் நாம் உலகுக்கு சொல்லு கிறோம். நமது வரலாறும் இதைத்தான் எடுத்துரைக்கிறது. யாருக்கும் தீங்கிளைக்க வேண்டும் என்றநோக்கம் நமக்குக் கிடையாது. யாரையும் அடிமைப்படுத்த நாம் விரும்பவில்லை. பிற நாடுகளின் செல்வத்தை அபகரிக்க நாம் விரும்பவில்லை. எனவே ஆதிக்க ரீதியான சக்தியாக விளங்கவேண்டும் என்பது நமது இலக்கல்ல. நாம் அறப்பண்பு ரீதியாக உண்மையான ஞானநெறி ரீதியாக செயல்படவே விரும்புகிறோம். உலகில் எங்கேனும் பலவீனமானவர்கள் இருந்தால் அவர்களை பாதுகாக்க விரும்புகிறோம். அவர்களது வறியநிலையை மாற்ற உதவிக் கரம் நீட்ட விரும்புகிறோம். இதுதான் நமது அடிப்படை சிந்தனை. இதற்கு தோல்வி என்பதே இல்லை. அந்நிய நாட்டு கண்ணாடியை அணிந்துகொண்டு இந்த சிந்தனையை விமர்சிப்பது சரியல்ல. நமது கருத்துக்கு அவர்களும் வரும்நாள் தொலைவில் இல்லை. நாம் யாரையும் புண்படுத்த விரும்பவில்லை. பண்படுத்த விரும்புகிறோம். எல்லோரும் வெற்றிபெற்றால் நாமும் வெற்றிபெறுவோம் அடிப்படையில் யாரிடமும் பாரபட்சம் காட்டக்கூடாது என்பதுதான். விஸ்வகுரு என்பதன் அடிப்படை கோட்பாடு இதுதான். இப்போதே உலகம் நம்மை இவ்வாறுதான் பார்க்கிறது.
கார்கில் யுத்தத்திற்குப் பிறகு 4 அல்லது 5 பெரிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பாரதத்திற்கு வந்து பார்வையிட்டனர். நாம் வெற்றிபெற்றோம். ஆனால் நம் எல்லையைத் தாண்டி நாம் செல்லவில்லை. பாரதியர்களைத் தவிற வேற எவருக்கும் இந்த மனோபாவம் இருக்காது. இது பாரதத்தில் மட்டுமே சாத்தியம். உலகின் குருவாய் பாரதம் உயர்ந்தோங்கினால் இதே நிலைதான் தொடர்ந்து நீடிக்கும். 60 சதவீத அமெரிக்கர்கள் சைவ உணவுப் பழக்கத்திற்கு மாறிவிட்டார்கள். உலகமே இப்போது யோகாவைப் பின்பற்றுகிறது. உலகின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யக்கூடிய ஆற்றல் நம்மிடம் உள்ளது என்பதையே இத்தகைய நிகழ்வுகள் உணர்த்துகின்றன.
ராம்ராஜ்யம் என்ற கருத்துருவின் அடிப்படை என்ன? இப்போதைய சூழ்நிலையில் இதை நாம் எவ்வாறு நனவாக்கமுடியும்.
ராம்ராஜ்யத்தில் மக்களும் அறவழியில் நிற்பார்கள்; மன்னரும் அறவழியில் நிற்பார். மன்னர் எளிமையானவராக இருப்பார். மக்களிடம் கடுமை காட்டமாட்டார். மன்னரின் சட்டங்களை மக்கள் பின்பற்றுவார்கள். எனவே மக்கள்தான் ஆட்சியாளர்களா என்ற கேள்விக்கே இடம் இல்லை. ஏனெனில் மக்களின் கருத்தறிந்துதான் மன்னர் ஆட்சி நடத்துவார். மக்களின் விருப்பத்திற்கு மாறாக மன்னர் எதையும் செய்யமாட்டார். ராம ராஜ்யத்தில் கொள்ளைக்கோ, மோசடிக்கோ, அறப்பிறழ்வுக்கோ இடமில்லை. உழைப்பா ளர்கள் போற்றப் படுவார்கள். அவர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படும். போதுமான ஊதியம் அளிக்கப்படும். தேசம் முழுவதம் சுபிட்சம் தழைக்கும். ஸ்ரீ சூக்தத்தில் ஒரு மந்திரம் உள்ளது. லட்சுமி எங்கே வாசம் செய்கிறாள் அதற்கான அடையாளங்கள் யாவை? இதற்கான பதில்: பிணி, பசி, தாகம் ஆகியவை உள்ள இடங்களில் லட்சுமி வாசம் செய்யமாட்டாள். கோபம், பொறாமை, பேராசை, கோஷ்டி பூசல், கலவரம், குழப்பம் உள்ள இடங்களிலும் லட்சுமி வாசம் செய்யமாட்டாள்.
தர்மம் தழைக்கும் இடத்தில்தான் லட்சுமி வாசம் செய்வாள். அங்கு அனைவரும் எல்லா நலமும் பெற்று சுபிட்சமாக வாழ்வார்கள். அங்கு மகிழ்ச்சியும் மங்களமும் நிறைந்திருக்கும். தேவையற்ற ஆடம்பரங்களுக்கு அங்கு இடம் இல்லை. ராமனும் அவரது தம்பி பரதனும் மன்னர்களாக இருந்தபோதிலும் அவர்களுக்கு துளியும் அதிகார வெறியில்லை. மக்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டே அவர்கள் ஆட்சி நடத்தினார்கள். நாம் மூன்று முக்கிய அம்சங்களில் மாற்றங்களை கொண்டுவர வேண்டியிருக்கிறது. இதற்கான அளவுகோள்தான் ராமராஜ்யம். இந்த மாற்றம் தரம் சார்ந்ததாக இருக்கவேண்டும். பிணிகளை ஒழிக்கவேண்டும். அகால மரணங்களை தவிர்க்கவேண்டும். யாரும் பசியாலும் பட்டினியாலும் பரிதவிக்கக்கூடாது. தாகத்தால் துடிக்கக்கூடாது. கள்ளர்களும் இரவலர்களும் இருக்கக்கூடாது. இவையே அரசு நிர்வாகம் கட்டமைக்கப்பட்ட சமூகத்தின் அடிப்படை கொள்கைகளாக இருக்கவேண்டும். இதற்கான தடைகளை விளக்குவதே ராமபிரானின் கோட்பாட்டை முன்னெடுப்பதற்கான முதற்படியாகும். எனவே, ராமராஜ்யத்தை நம்மால் நனவாக்க முடியும். இதற்கு சமூகம் தயாராகி வருகிறது. மன்னரும் நிர்வாகமும் சமூகத்தின் சிருஷ்டிகளே. சமூகத்திலிருந்து நாம் பணியைத் தொடங்கினால் ராமராஜ்யத்தை அடைவது சாத்தியமே.