மதமாற்றம் – வாசகரின் குமுறல்

மதமாற்றத்தைப் பற்றி இன்று நேற்றல்ல, கடந்த இருபது முப்பது வருடங்களாக நான் வேதனை
படுகிறேன். நம்மில் படிப்பறிவு இல்லாத மக்கள் காசுக்காக புனிதமான இந்துமதத்தை விட்டு
மாற்றுமதத்திற்கு செல்கிறார்கள் என்று வருத்தம். உயர் வகுப்பினர் என்று கருதும் சிலர்
தீண்டாமையை கடைபிடிகிறார்கள் என்கிறார்கள். தூண்டிலில் மீனை பிடிப்பது போல பசப்பு
வார்த்தைகளால் மதம் மாற்றுகிறார்கள். காதலித்து திருமணம் செய்தால் மதம் மாறுவானேன்,
அப்படியானால் அந்த காதல் பொய்தானே? இந்துக்கள் ஆணோ பெண்ணோ அவர்கள் தான் மாறுகிறார்கள். இன்று இந்தியாவில் சிறுபான்மையினர் 14 கோடிபேர் இருக்கிறார்கள். எவர்கள் ஜெருசெலத்திலிருந்தோ, துருக்கியிலேருந்தோ வந்தவர்களால் இல்லை, இவர்கள் அங்கிருந்து பெண்களை அழைத்து வந்தார்களா . சிந்திக்க தெரியாத பாமர இந்துக்களை ஆசைவார்த்தைகள் கூறி இந்து மதத்திலிருந்து மாரி பிறமதங்களில் வீழ்கிறார்கள்.

நம் மக்கள் கிறிஸ்தவ பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கிறார்கள். அவர்கள் slow poison போல
மனங்களை மாற்றி பின்னர் மதத்தையே மாற்றி விடுகிறார்கள். அதுபோலவே காதல் திருமணங்களும் . மதம் மாறினால் இருவரும்தானே மாறவேண்டும். ஏன் இந்துக்கள் மட்டும் மதம்
மாறுகிறார்கள்? குறிப்பாக ப்ராம்னனை மதம் மாற்றினால் அதிக கமிஷன் கிடைக்குமாம். ஒரு
வைணவனை மாற்றினால் தரகருக்கு லட்சம் ரூபாய் கமிஷனாம்.

எங்கள் வீட்டின் வேலைக்கு உதவியாக வரும் பெண்மணி ஜோதி. அவருடைய குழந்தைகள்
கல்லூரியில் படிக்கின்றனர். மகன் பாலிடெக்னிக்கில் படிக்கிறான், மகள் கலூரியில் முதலாம்
ஆண்டு பி. காம் படிக்கிறாள். குடும்பம் நடத்த பற்றாகுரைக்கு தான் பணிபுரியும் இடங்களில்
முன்பணம் வாங்கியும் வங்கியில் கடன் வாங்கியும் குடுமபத்தேவைகளை சமாளித்து வருகிறாள் . வங்கியின் வாசலில் கிறிஸ்துவ மத்ததை நபர் ஒருவன் நின்று கொண்டு எங்கள் மதத்தில் சேர்ந்து விடுங்கள், நீங்கள் கடனே வாங்க வேண்டாம். எல்லாவற்றையும் நாங்களே பார்த்துகொள்வோம் என்று ஆசைவார்த்தை கூறி மதம் மற்ற முயன்று இருக்கிறான். ஜோதியும் அவரிடம் பணதிற்காக நான் சார்ந்துள்ள இந்து மதத்தை விற்கமாட்டேன். கடன் வாங்கினால் ஒருவருடத்தில் அதனை அடைத்து விடுவேன். இன்னும் இரு வருடங்கள் சென்றால் என்ன குழந்தைகள் சம்பாதிக்க தொடங்கி விடுவார்கள். இன்று மதம் மாறிவிட்டால் அன்று என்னால் இந்து மதத்தை வாங்க முடியுமா என்றால். எனக்கு அவளின் மீது பெருமிதம் ஏற்பட்டது. ஜோதி எங்கள் வீட்டு பணிப்பெண் மட்டுமல்ல இந்தியாவின் குத்து விளக்கும் கூட .

– சாவித்திரி சிவசைலம் கோயம்புத்தூர், வயது:85