தாய்மதம் திரும்பிய முகமது அப்துல்லா

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் வசிப்பவர் அவினாஷ். இவர், ‘ஹிந்து புத்ரா’ என்ற அமைப்பை நடத்தி வருகிறார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். ஒரு மாதத்திற்கு முன்பு, பெரோகாரா கிராமத்தில் வசிக்கும் சத்யம் படேல் என்பவர், அவினாஷை அழைத்து, சில ஆண்டுகளுக்கு முன்பு முஸ்லிமாக மதம் மாறிய தனது மாமா முகமது அப்துல்லா என்ற உமேஷ் ராயை மீண்டும் ஹிந்து மதத்திற்கு அழைத்து வருவதற்காக உதவி கோரினார். அப்துல்லாவுடன் ஹிந்து புத்ரா அமைப்பினர் சென்று பேசி புரியவைத்தனர். அவரும் மனம் திருந்தி தாய்மதம் திரும்ப ஒப்புக்கொண்டார்.

கம்பவுண்டராக பணியாற்றிவந்த உமேஷ் வேலை நிமித்தமாக அருகில் உள்ள முஸ்லீம் காலனிக்கு செல்வார். காலனியில் வசிப்பவர்கள் அவரை முஸ்லிம் மதத்தை ஏற்க வற்புறுத்தினர். முஸ்லிம் பெண்ணைத் திருமணம் செய்து வைப்பதாக உறுதியளித்தனர். இதனால், உமேஷ் மதம் மாறினார். இந்நிலையில், அவரது வீட்டருகில் வசிக்கும் முகமது ரியாஸ் என்பவருடன், அப்துல்லாவின் மனைவிக்கு தவறான தொடர்பு இருந்ததை அறிந்தார். பஞ்சாயத்தை கூட்டி பிரச்சினையை தீர்க்கக்  கோரினார். ஆனால், அவர்கள் ரியாஸின் பக்கம் நின்றனர். ரியாஸ் மீது குற்றம் இல்லை என்றும் கூறினர். இதனால், அவமானம் அடைந்தார் அப்துல்லா. இந்த விவகாரத்தை அறிந்த உமேஷின் மருமகன், தன் மாமாவால் குடும்பத்தில் ஏற்பட்ட கறையைத் துடைக்க இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டார். உண்மையை உணர்ந்துகொண்ட அப்துல்லாவும் பெரோகாரா கிராமத்தில் உள்ள காளி கோயிலில் சடங்குகள் செய்து முறைப்படி தாய்மதம் திரும்பினார்.