உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் பிரதமர் நரேந்திர மோடி மெய்நிகர் சந்திப்பில் உரையாடினார். அந்த சந்திப்பில் அயோத்தியின் வளர்ச்சி, எதிர்கால தேவைகள், நவீனமயமாக்கல், சாலைகள், ரயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் என பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. முன்னதாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் அயோத்தியில் ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கான உ.பி அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது அதற்கு மாநில அரசு சுமார் ரூ. 1,000 கோடியை ஒதுக்கியுள்ளது. மத்திய அரசு ரூ. 250 கோடியை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.