2021ம் ஆண்டிற்கான பிரிக்ஸ் உச்சி மாநாட்டை அதன் தலைவராக தற்போது உள்ள பாரதம் தலைமையேற்று நடத்துகிறது. பிரதமர் நரேந்திர மோடி, நாளை (செப்டம்பர் 9, 2021) 13வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டை இணைய வழியில், மெய்நிகர் மாநாடாக வழிநடத்துகிறார். இதில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். இக்கூட்டத்தில் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, தென்னாப்பிரிக்கா அதிபர் சிரில் ரமபோசா ஆகியோரும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கின்றனர். இந்த ஆண்டு பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் கருப்பொருளாக ‘பிரிக்ஸ்@15: தொடர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் ஒருமித்த கருத்துக்கான பிரிக்ஸ் ஒத்துழைப்பு’ என்பது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக பிரிக்ஸ் மாநாட்டிற்கு பிரதமர் மோடி தலைமை வகிக்கிறார். முன்னதாக அவர் 2016ல் கோவாவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். ஆப்கன் விவகாரம் இம்மாநாட்டில் முக்கிய இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.