கலப்பு தடுப்பூசி ஆய்வு

பாரதத்தில் கொரோனாவுக்கு போடப்படும் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளை முதல் தவணையில் ஒன்று, 2 வது தவணையில் மற்றொன்று என வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்தும்போது, அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகளை கலந்து செலுத்துவதற்கான ஆய்வுக்கு இந்திய மருந்து தரக் கட்டுப்பாடு ஆணையம் நேற்று அனுமதி அளித்துள்ளது.