ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து கேரளாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட 17 டன்கள் இறக்குமதி செய்யப்பட்ட பேரீச்சம்பழங்கள் காணாமல் போனதாக கூறப்பட்ட விவகாரத்தில், அவை முதல்வர் பினராயி விஜயன், துணைத் தூதரக ஜெனரல், மற்றும் முன்னாள் அமைச்சர் கே.டி ஜலீல் ஆகியோருக்குத் தெரிந்தே காணாமல் போனதாக கேரள தங்கக் கடத்தல் வழக்கில் முதன்மை குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் குற்றம் சாட்டியுள்ளார். அந்த பேரீச்சம் பழ சரக்குகளுக்கான அனுமதியை சிவசங்கரே கையாள்வார் என்று கூறப்பட்டது. அவற்றில் இருந்த சில சீல் வைக்கப்பட்ட பெட்டிகள் தனியாகப் பிரித்து வைக்கப்பட்டிருந்தன. அவை மிகக் கனமானவை என்பதால் அதில் இருப்பது பேரீச்சை அல்ல வேறு ஏதோ பொருள் என எனக்கு புரிந்தது. எடை குறைவான பேரீச்சை பெட்டிகளை மட்டுமே துணைத் தூதரக அலுவலகத்திற்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி எனக்கு உத்தரவிடப்பட்டது. ரம்ஜானை முன்னிட்டு கேரளாவில் இறக்குமதி செய்யப்பட்ட அந்த பேரீச்சைகளை விநியோகிக்க உள்ளதாக துணைத் தூதரகம் கூறியது. ஆனால் குறைந்த அளவிலான பேரீச்சை பழங்கள் மட்டுமே விநியோகிக்கப்பட்டன. எஞ்சியவற்றின் கதி என்னவென்று தெரியவில்லை. கேடி ஜலீல் துணைத் தூதரகத்துடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்த கே.டி ஜலீலுக்கு அதைபோன்ற பல பெட்டிகள் தனியாக அனுப்பப்பட்டன. கே.டி ஜலீல் அரசின் எந்த முன் அனுமதியுமின்றி, வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்குத் தெரியாமல் தூதரக ஜெனரலுடன் பல ரகசிய சந்திப்புகளை நடத்தினார். கே.டி. ஜலீலும், துணைத் தூதரகமும், குர்ஆன் விநியோகம், பேரீச்சை வினியோகம் மற்றும் வேறு சில வணிக ஒப்பந்தங்கள் உள்ளதாகக் கூறி சரக்குகளை ஒப்படைத்தல் உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் தூதரக ஜெனரலுடன் வாட்ஸ்அப் மூலம் தொடர்ந்து தொடர்பில் இருந்தனர்’ என தெரிவித்துள்ளார்.