அமைச்சரின் டுவிட்டர் கணக்கு முடக்கம்

அமெரிக்காவின் பதிவுப்புரிமைச் சட்டத்தை மீறியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. டுவிட்டரின் திடீர் நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த ரவிசங்கர் பிரசாத், ‘கூ’ சமூக ஊடகத்தில் இது தொடர்பாக பதிவுகளை வெளியிட்டார். அதில், ‘நண்பர்களே, இன்று மிகவும் விசித்திரமான ஒன்று நடந்துள்ளது. அமெரிக்காவின் டிஜிட்டல் மில்லினியம் பதிப்புரிமைச் சட்டத்தை மீறியதாக கூறி டுவிட்டர் என் கணக்கிற்கான அணுகலை ஏறத்தாழ ஒரு மணி நேரம் மறுத்து விட்டது. அதன்பின்னர் அவர்கள் எனது கணக்கை அணுக அனுமதித்தனர். டுவிட்டரின் நடவடிக்கை, தகவல் தொழில் நுட்ப விதிகளை முற்றிலும் மீறிய செயல். எனது கணக்கின் அணுகலை மறுப்பதற்கு முன்னதாக முன் அறிவிப்பை செய்ய டுவிட்டர் தவறி விட்டது’ என அவர் கூறி உள்ளார்.