பிரதமருக்கு அமைச்சர் நன்றி

பாரத ஜவுளித் தொழிலதிபர்களுடன் காணொலி மூலம் கலந்துரையாடிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், இலக்குகளை அடைய முயற்சிகளை ஒன்றிணைத்து அனைவரும் கூட்டாக செயல்பட வேண்டும். சவாலான இந்தக் காலக்கட்டத்தில், ஜவுளித் தொழில் 100 பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கை விரைவாக அடைய ஜவுளித் தொழிலில் சம்பந்தப்பட்ட அனைவரும் பாடுபட வேண்டும். பிரதமரின் தலைமையின் கீழ், ஜவுளித்துறை புதிய ஊக்கம் பெற்றுள்ளது. நமது கைவினை கலைஞர்கள், நெசவாளர்கள், விவசாயிகள், சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோரை தற்சார்பு பாரதத்தை எட்டும் முயற்சியில் ஈடுபடுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், ஜவுளிக்கான ஜி.எஸ்.டி வரியை ஐந்து சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்த்தும் முடிவை தள்ளி வைத்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும், நிதியமைச்சருக்கும் நன்றி தெரிவித்த கோயல், ஜவுளித் தொழிலுக்கு இது புத்தாண்டு பரிசு என தெரிவித்தார்.