நிக்கி ஆசியா பத்திரிகையில் டெட்சுரோ கோசாகா என்பவர் எழுதியுள்ள ‘ஒரு குழந்தை ராணுவ விளைவுகள்’ என்ற கட்டுரை ஒன்றில், ‘சீன கம்யூனிஸ்ட் கட்சி, தன் நாட்டின் ராணுவத்தில் உள்ள பலவீனங்களை மறைக்கவே ஆளில்லா விமானங்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், ரோபோ பயன்பாடு போன்ற நவீன உத்திகளை அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் அங்கு பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்த ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை திட்டம்தான். சீன வீரர்களில் 70 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் வீட்டில் ஒரே குழந்தையாக இருந்தவர்கள். செல்லமாக வளர்க்கப்பட்டவர்கள். குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை மதிக்க வேண்டும், நன்றாகப் பராமரிக்க வேண்டும் என்ற கன்பூசியனிஸ்ட் கருத்து சீனாவில் ஆழமாக வேரூன்றியுள்ளது. சீன மக்கள் ராணுவ வீரர்களுக்கு உரிய மதிப்பளிப்பதில்லை. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் இக்கால சீன இளைஞர்கள் மன உறுதி அற்றவர்களாக, கோழைகளாக உள்ளனர். இதனால் சீனா தன் ராணுவ தளவாடங்களின் பலத்தை அதிகரித்தாலும் அதற்கேற்ற இயக்கம், பராமரிப்பு, தொழில்நுட்ப பணியாளர்கள் கிடைப்பதில்லை. இதனல் சீனா நீண்ட கால போரில் ஈடுபடவே முடியாது’ என தெரிவித்துள்ளார்.