உறுப்பினர் சேர்க்கை நீட்டிப்பு

காங்கிரசில் தலைவர் பதவி உட்பட அனைத்து பதவிகளுக்கும், அமைப்புகளுக்கும் உட்கட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்காக கடந்தாண்டு நவம்பர் 1ம் தேதியில் இருந்து புதிய உறுப்பினர் சேர்க்கை நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரையில் 1.2 கோடி புதிய உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். இது வரும் 15ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. ஆனால், நவம்பர் முதல் இதுவரை நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கையில் எதிர்பார்த்ததைவிட சொற்ப எண்ணிக்கையிலேயே உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். தெலுங்கானா மட்டுமே இதில் சற்று ஆறுதல் அளித்துள்ளது. பல மாநிலங்கள் உறுப்பினர் சேர்க்கைக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை எட்டவேயில்லை. இதனால், சோனியா உட்பட நேரு குடும்பம் முழுவதும் அதிருப்தியில் உள்ளது. ஆனால், அமைப்புத் தேர்தலை ஒத்திவைக்க இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்பதால், இத்திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது என சமூக ஊடகத்தில் பலர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.