ஏ.பி.வி.பி தென்பாரத அமைப்பு செயலாளர் ஆர். குமரேஷ், அகில பாரத அமைப்புச் செயலாளர் ஆஷிஷ் சௌஹான், அகில பாரத இணை அமைப்புச் செயலாளர் பால கிருஷ்ணன் ஆகியோர் தமிழக ஆளுநரை சந்தித்து மனு அளித்தனர். அதில் ‘ஒரு சில தினங்கள் முன்பு தமிழக முதல்வர் ஸ்டாலின் வீட்டின் முன்பு மாணவி லாவன்யாவின் மரணத்திற்கு நீதி கேட்டு அறவழியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஏ.பி.வி.பி அகில பாரத பொது செயலாளர் நிதி திரிபாதியும் ஒருவர். மேலும் தமிழகத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களும் அதில் உள்ளனர். அவர்களை உடனடியாக தமிழக அரசு விடுவிக்க வேண்டும். கட்டாய மதமாற்றத்தடை சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் இடம் பெற்றுள்ளன.