நடத்தை மாற வேண்டும்

அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸின் தங்கை மகள் மீனா ஹாரிஸ் ஒரு வழக்கறிஞராக மாறிய தொழிலதிபர். அவர் இன்ஸ்டாகிராமில் 800,000 க்கும் அதிகமான பின்தொடர்வோர் கொண்டுள்ளார். அவரது பதிவுகள் அரசியல் முதல் தனிப்பட்டவை வரை பலவிதமாக உள்ளன. “கமலா, மாயாவின் பெரிய யோசனை” என்ற தலைப்பில் ஒரு குழந்தைகளின் புத்தகத்தை எழுதியுள்ளார் மீனா. மேலும் அவர் “நிகழ்வு” என்றழைக்கப்படும் பெண்களின் ஆடை தயாரிப்பு நிறுவனர். “லட்சிய பெண்” என்ற புத்தகம், கமலா ஹாரிஸ் வெள்ளை மாளிகையில் முதல் பெண் ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு முந்தைய நாள் இரவு மீனாவால் வெளியிடப்பட்டது. ஆனால், அமெரிக்காவில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதியின் உறவினர்கள் அவர்கள் பெயரை பயன்படுத்தி தங்கள் சொந்த நிறுவனங்களை, பிராண்டுகளை உயர்த்தப் பார்ப்பது வெள்ளை மாளிகையின் விதிமுறைகளுக்கு எதிரானது. இதனால், வெள்ளை மாளிகையில் மீனாவின் முயற்சிகள் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை வக்கீல்கள் மீனாவுக்கு விளக்கமளித்த பிறகும் மீனா இதனை தொடர்வதாக கூறப்படுகிறது. ஆனால் மீனா ஹாரிஸ் தரப்பு இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.