மருத்துவ உலக உச்சி மாநாடு

மருந்துத் துறையின் முதல் உலகளாவிய புதுமைகள் உச்சி மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி, ‘உலகின் மருந்தகம் என்று சமீப காலங்களில் பாரதம் அழைக்கப்படுவதற்கு அதன் சுகாதாரத் துறை ஈட்டிய உலகளாவிய நம்பிக்கை வழிவகுத்துள்ளது. நாங்கள் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நல்வாழ்வை நம்புகிறோம். கொரோனா பெருந்தொற்றின்போது இந்த உணர்வை முழு உலகிற்கும் நாங்கள் வெளிப்படுத்தினோம். தொழில்துறையை உயரத்திற்கு கொண்டு செல்லும் திறன் கொண்ட விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் பாரர்தத்தில் அதிகமாக உள்ளனர். “டிஸ்கவர் அண்ட் மேக் இன் இந்தியா”வுக்கு இந்த வலிமையை பயன்படுத்த வேண்டும். தடுப்பூசிகள், மருந்துகளுக்கான மூலப்பொருட்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். பாரதம் வெல்ல வேண்டிய ஒரு துறை இது. பாரதத்தில் சிந்தித்து, கண்டுபிடித்து, உலகத்திற்காக இங்கேயே உற்பத்தி செய்யுமாறு உங்கள் அனைவரையும் நான் அழைக்கிறேன்’ என பேசினார்.