தீவிர முஸ்லிம் அமைப்பான ஜமாத் இ இஸ்லாமிக்கு சொந்தமான மத்யமம் பிராட்காஸ்டிங் லிமிடெட் நிறுவனம் மீடியாஒன் தொலைக்காட்சியை இயக்கி வந்தது. இதன் மூலம் பல தேசவிரோத கருத்துகள் பரப்பப்பட்டன. டெல்லி சி.ஏ.ஏ வன்முறை கலவரத்தின்போது அதனை நேரலை ஒளிபரப்பு செய்தது. மசூதிகள் பற்றி எறிவதை போன்ற போலி செய்திகளை வெளியிட்டு முஸ்லிம்களை வன்முறையில் இறங்க தூண்டியது. ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்குப் பிறகு காஷ்மீர் பயங்கரவாதிகளை தியாகிகளாக சித்தரித்து இடையறாது செய்தி வெளியிட்டது மீடியா ஒன். சமீபத்தில் தேச பாதுகாப்புக் காரணங்களுக்காக மத்திய உள்துறை அமைச்சகத்தால் இத்தொலைகாட்சி தடை செய்யப்பட்டது. இதனை நீதிமன்றமும் உறுதி செய்தது. ஆனால், மீடியா ஒன் தொலைக்காட்சி முடக்கப்பட்டாலும் இத்தொலைக்காட்சியின் யூடியூப் சேனல் தற்போதும் தொடர்ந்து செயல்பட்டு தேசவிரோத கருத்துகளை பரப்பி வருகிறது. இந்நிலையில், மீடியா ஒன் மீதான தடையை நீக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்குரிடம் கேரள எம்.பி.க்கள் மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.