ஊடக கயமைத்தனம்

உத்தரப் பிரதேசம் கோரக்பூரில் உள்ள கோரக்நாத் கோவிலில் அஹ்மத் முர்தாசா அப்பாஸி என்ற முஸ்லிம் இளைஞன் திடீரென தாக்குதல் நடத்தி, பாதுகாப்புப் பணியாளர்களை காயப்படுத்தினான். ஆயுதத்துடன் கோயிலுக்குள் நுழைய முயன்றான். இந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து செய்தி வெளியிட்ட என்.டி.டி.வி தொலைக்காட்சி, “அவர் ஒரு ஐஐடி பட்டதாரி உ.பி.யில் உள்ள கோரக்நாத் கோயிலுக்கு வெளியே காவலர்களைத் தாக்குகிறார்” என செய்தி வெளியிட்டது. ஆனால், தாக்குதல் நடத்தியவர் அஹ்மத் முர்தாசா அப்பாசி என்ற முஸ்லிம் நபர் என்பதையும் அவர் கோயிலில் தாக்குதல் நிகழ்த்தியபோது “அல்லாஹு அக்பர்” என்று கத்தினார் என்பதையும் என்.டி.டி.வி மறைத்துவிட்டது. ஆனால், ஜாமியா பல்கலைக்கழக போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்காக 2020 ஜனவரியில் கோபால் என்பவர் கைது செய்யப்பட்டபோது, ​​இதே என்.டி.டி.வி நிறுவனம், “ஜாமியா துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ராமபக்தர் கோபால் என கூறி அவர் ஒரு ஹிந்து ராம பக்தர் என்று தெளிவாக வெளிப்படுத்தியது. என்.டி.டி.வியின் இந்த பாசாங்குத்தனத்தையும் இரட்டை மனநிலையையும் நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.