கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிராவின் முதல்வர் உத்தவ் தாக்கரே, பல சந்தர்ப்பங்களில் தடுப்பூசிகளை வாங்குவதற்கும் கொரோனா நிர்வாக செலவுகளுக்கும் அரசிடம் போதுமான நிதி இல்லை என பேசியுள்ளார். ஆனால், இவரது தலைமையிலான மாநில அரசு, துணை முதல்வர் அஜித் பவாரின் சமூக ஊடக கணக்குகளை நிர்வகிக்க 6 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இது அங்கு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பொதுமக்கள், பா.ஜ.கவினர், சமூக ஊடகங்கள் என பல தரப்பிலும் இதற்கு கண்டனங்கள் எழுந்த்தால் வேறு வழியின்றி பவார் தனது சமூக ஊடக கணக்குகளை நிர்வகிப்பதற்கான உத்தரவை ரத்து செய்துள்ளார்.