மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘மத்திய அரசு வழங்கிய முதல் வெளியேற்ற ஆலோசனையால் 18,000 பாரத குடிமக்கள் உக்ரைனை விட்டு வெளியேறினர். தற்போது செயல்படுத்தப்படும் ஆப்பரேஷன் கங்காவிம் மீட்புப் பணிகள் மிகப்பெரிய அளவில் நடந்து வருகின்றன. வியாழன் மாலை வரை 30 விமானங்கள் 6,400 பேர் தாயகம் அழைத்து வரப்பட்டனர். இன்றும் 18 விமானங்கள் வருகின்றன. உக்ரேனிய மற்றும் ரஷ்ய அதிகாரிகளிடமிருந்து நமது குடிமக்களுக்கு பாதுகாப்பான வெளியேற்ற வழியை வலியுறுத்தி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது மத்திய அரசு. நாங்கள் எல்லா பக்கங்களிலும் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கிறோம். உக்ரைனில் உள்ள தூதரகம் நமது மாணவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. மாணவர்களை நாட்டின் மேற்குப் பகுதிக்கு அழைத்துச் செல்ல சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்வதில் உக்ரைனிய அதிகாரிகளின் ஆதரவை கோரியுள்ளோம். ரஷ்யா, ருமேனியா, போலந்து, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா மற்றும் மால்டோவா உள்ளிட்ட நாடுகளுடன் மத்திய அரசு திறம்பட இப்பணிகளை ஒருங்கிணைத்து வருகிறது. இதை சாத்தியமாக்க உதவிய உக்ரைன் அதிகாரிகளை நாங்கள் பாராட்டுகிறோம்’ என்றார்.