பஞ்ஜஷீரில் வெகுஜன படுகொலை

தலிபான்கள் ஆப்கனின் பஞ்ஜஷீர் பகுதியை கைப்பற்றிய பிறகு, பஞ்ஜஷீர் பள்ளத்தாக்கில் உள்ள வடக்கு கூட்டணி தலைவர்களின் குடும்ப உறுப்பினர்கள், எதிர்ப்புப் படையினர், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரையும் கூட்டம் கூட்டமாக கொன்று வருகின்றனர். கிராமங்களுக்குள் நுழைந்து அங்கு கண்ணில் படுபவர்களை எல்லாம் சித்திரவதை செய்து கொல்கின்றனர். மறைந்த மார்ஷல் ஃபாஹிமின் மருமகனும், முன்னாள் ஆப்கன் ராணுவத் தளபதியுமான மோஜிர் ஹக்ஜோ உட்பட பல தலைவர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் ஈவு இரக்கமின்றி தூக்கில் இடப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் உட்பட பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு, ராணுவ கவச வாகன்ங்களை ஏற்றி கொல்லுதல், அவர்கள் தலைகளை வெட்டி நகரின் முக்கிய இடங்களில் வைத்தல், உடல்களை ஆற்றில் கொட்டுதல், பல ஆண்களை சில  ரகசிய இடங்களுக்கு அழைத்து செல்லுதல் என பல கொடூர செயல்கலை செய்வதாக அங்கிருந்து வரும் சமூக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.