மமதாவின் கேலா ஹோப்

மேற்கு வங்க முதல்வரும் திருணமூல் கட்சித் தலைவருமான மமதா பேனர்ஜி, அம்மாநிலத்தில் விளையாட்டுத்துறையை ஊக்குவிக்க ‘விளையாட்டு துவங்கட்டும்’ என பொருள்படும் ‘கேலா ஹோப்’ என்ற நிகழ்ச்சியை துவக்கிவைத்தார். அந்நிகழ்ச்சியின்போது மேடையில் அவர் கால்பந்தை கைகளால் தட்டி, தூக்கிப் போட்டு விளையாடினார். பந்துகளை மக்களிடம் வீசி எறிந்தார்.

இது போன்ற அவரது கோமாளித்தனங்கள்தான் தற்போது நெட்டிசன்களுக்கு நல்ல பொழுதுபோக்கு. மமதா பேனர்ஜி, கால்பந்து வீரர் ரொனால்டோவிற்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என ஒரு டுவிட்டர் பயனாளி பதிவிட்டார். மற்றொருவர், அவர் ஒரு பன்முகத்தன்மைக் கொண்டவர். மமதாவுக்கு பல மொழிகள் தெரியும், அவர் ஒரு ஐ.டி நிபுணர், தற்போது ஒரு சிறந்த விளையாட்டு வீரர், நல்ல நடிகர் என கிண்டலடித்தார். உலக கால்பந்து அமைப்பான பிபா, இனி அடுத்த போட்டிகளில், மக்களின் மீது பந்து எறியும் திறமையை வைத்தே வீரர்களை ஏலம் எடுக்கும் என்றார் மற்றொரு சமூக ஊடக பயனாளி. இப்படி, சமூக வலைத்தளங்களில் மமதா குறித்த கிண்டல்கள்தான் இப்போது அங்கு டிரெண்டிங்.