மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆங்கில செய்தி சேனலான என்.டி.டி.வியின் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் இவரை பேட்டி கண்ட மோனிதீபா, மமதாவின் மருமகனும் திருணமூல் கட்சித் தலைவருமான அபிஷேக் பானர்ஜி பற்றி ஒரு கேள்வியைக் கேட்டபோது, மமதா மிகவும் கோபமடைந்து நேர்காணலை விட்டு நடுவிலேயே வெளியேறினார். மோனிதீபா சமாதானப்படுத்தியும் மமதா அதனை ஏற்கவில்லை. பின்னர் இந்த இக்கட்டை சமாளிக்க நெட்வொர்க் சிக்கல் காரணம் என சப்பைக்கட்டு காரணம் கூறினார் மோனிதீபா.
மமதா இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியபொழுது, ‘நன்றி’ என கூறியதும் மைக்கை அகற்றுமாறு தன்னுடைய உதவியாளர்களிடம் சொல்வதும் நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கு தெளிவாகவே கேட்டது. மமதா பானர்ஜிக்கு கேள்விகள் பிடிக்கவில்லை என்றால் நேர்காணல்களில் இருந்து பாதியில் வெளியேறுவது இது முதல்முறையல்ல. பலமுறை இது நிகழ்ந்துள்ளது. முன்னதாக, ஒரு டவுன்ஹால் நேர்காணலில், திருணமூல் குண்டர்கள் நடத்திய வன்முறை குறித்து ஒரு மாணவர் கேள்வி கேட்டபோது அவரை கம்யூனிசவாதி என முத்திரை குத்தினார் மமதா.