மாலேகான் குண்டுவெடிப்பு சாட்சியம்

செப்டம்பர் 29, 2008 அன்று, மாலேகானில் உள்ள ஒரு மசூதிக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த வெடிபொருள் வெடித்தது. இந்த சம்பவத்தில் 6 பேர் பலியாகினர், 100 பேர் காயமடைந்தனர். இதனை ஹிந்து தீவிரவாதம், காவித் தீவிரவாதம் என முத்திரை குத்தி அரசியல் ஆதயம் தேடியது அன்றைய காங்கிரஸ் அரசு. பாஜக எம்.பி சாத்வி பிரக்யா சிங் தாக்கூர், லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோகித், சுதாகர் திவேதி, மேஜர் ரமேஷ் உபாத்யாய் (ஓய்வு), அஜய் ரஹிர்கர், சுதாகர் சதுர்வேதி, சமீர் குல்கர்னி ஆகியோரை இவ்வழக்கில் கைதுசெய்து கடுமையான சித்ரவதைக்கு உள்ளாக்கியது. நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணையில், சாட்சிகளில் ஒருவர், ‘இவ்வழக்கில் சில முக்கிய ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் பெயர்களை கூறுமாறு மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்புப்பிரிவு காவல்துறை (ஏ.டி.எஸ்) எனக்கு அழுத்தம் கொடுத்தது. என்னை கைது செய்தனர். தினமும் அடித்து சித்ரவதை செய்தனர். உண்மையைச் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டினர். இதனால், அன்று பொய் சாட்சி சொன்னேன். ஆனால் இன்று நான் தைரியமாக உண்மையை பேசுகிறேன்’ என்று நீதிமன்றத்தில் கூறினார். சமீபத்தில்கூட, யோகி ஆதித்யநாத், நான்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் பெயர்களைக் கூறுமாறு ஏ.டி.எஸ் தனக்கு அழுத்தம் கொடுத்ததாக மற்றொரு சாட்சியும் கூறியிருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது. இவ்வழக்கில் இதுவரை 222 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். அதில், 17 சாட்சிகள், போலியாக வழக்குப் பதிவு செய்த அரசு தரப்புக்கு ஆதரவளிக்க மறுத்துவிட்டனர்.