மதுரை எய்ம்ஸ்

மதுரை எய்ம்ஸ் மாணவர் சேர்க்கை தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ‘மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான தற்காலிக இடத்தை தேர்வு செய்தால் நடப்பாண்டிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும். செலவினம், அலுவலர் தேர்வு, உட்கட்டமைப்பு ஆகியவற்றை மத்திய சுகாதாரத்துறை ஏற்றுக்கொள்ளும். தற்காலிக இடத்தை தமிழக அரசு தேர்வு செய்தால் மதுரை எய்ம்ஸில் 50 முதல் 100 மாணவர் சேர்க்கை நடைபெறும்’ என கூறப்பட்டுள்ளது.