மா.சுப்பிரமணியன் புது விளக்கம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘தமிழகத்தில் தொற்று பாதிப்பு அதிகம் இருந்த மாவட்டங்களில் மருத்துவத்துறை நடத்திய ஆய்வில், கோயில்களில் அதிகம் கூட்டம் கூடியதால்தான் தொற்று அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டது. அதனால் கோயில்களில் தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை’ என்ற ஒரு விசித்திர விளக்கத்தை அளித்துள்ளார். அவரின் இந்த பேச்சு ஹிந்துக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அப்படியெனில், சர்ச்சுகளிலும் மசூதிகளிலும் கூட்டம் கூடுவதே இல்லையா, அங்கு எல்லாம் சமூக இடைவெளி முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா? டாஸ்மாக், அரசு போக்குவரத்து பேருந்துகள், காய்கறி கடைகள், மீன் இறைச்சி விற்பனை கூடங்கள் உள்ளிட்டவற்றில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்படுகிறதா? அரசியல்வாதிகள் நடத்தும் நிகழ்ச்சிகள், ஆய்வு கூட்டங்களில் சமூக இடைவெளி மீறப்படுவது இல்லையா?  இவ்வளவு ஏன், அமைச்சர் கலந்துகொண்ட விழாவில் அவரே சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லையே, இவர் எப்படி மற்றவர்களை குற்றம் சொல்லமுடியும்?  இப்படி அரசு, அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், மாற்று மதத்தினர் செய்யும் எந்த தவறுகளையும் கண்டுகொள்ளாத தி.மு.க தலைவர்கள், ஹிந்துக்களுக்கு மட்டும் அனைத்து விதங்களிலும் தொடர்ந்து துரோகம் இழைத்து வருகின்றனர் என போதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.