தொடரும் லவ் ஜிஹாத்

கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தைச் சேர்ந்த அபூர்வ பூரணிக், ஹிந்து பிராமணக் குடும்பத்தை சேர்ந்த எம்.பி.ஏ பட்டதாரி. இவர் ஒரு முறை ஆட்டோவில் சென்றபோது, முகமது இஜாஸ் என்ற ஆட்டோ டிரைவரின் அறிமுகம் கிடைத்தது. தானும் ஒரு பட்டதாரி, ஓய்வு நேரத்தில் ஆட்டோ ஓட்டிக் கொண்டு மேல் படிப்பை தொடர்வதாக கூறியிருக்கிறான் முகமது இஜாஸ். இப்பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்து திருமணத்தில் வந்து நின்றது. இதற்கு அபூர்வாவின் பெற்றோர் சம்மதிக்கவில்லை. பெற்றோர் எதிர்ப்பை மீறி 2018ல் திருமணம் செய்து கொண்டார் அபூர்வா. திருமணத்துக்குப் பிறகு அபூர்வாவை கட்டாயப்படுத்தி முஸ்லிமாக மாற்றி பெயரையும் அர்ஃபா பானு என்று மாற்றினான் இஜாஸ். ஹிந்து பழக்க வழக்கங்களுக்கு தடைபோட்டு இறைச்சி சாப்பிடவைத்து துன்புறுத்தியுள்ளான். அவர்களுக்கு ஒரு மகன் பிறந்த நிலையில், இஜாஸுக்கு ஏற்கெனவே திருமணமாகி, 3 குழந்தைகள் இருக்கும் விவரம் அபூர்வாவுக்கு தெரியவந்து பிரச்சனையானது. இதனால் இஜாஸ் அபூர்வாவை அடித்து உதைத்து கொடுமை செய்தான். மனமுடைந்த அபூர்வா, தனது மகனுடன் பெற்றோரின் வீட்டிற்குச் சென்றார். விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதனையடுத்து கடந்த மார்ச் 10 அன்று சாலையில் சென்ற அபூர்வாவின் உடலில் 23 இடங்களில் கத்தியால் சரமாரியாகக் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டான் இஜாஸ். மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் அபூர்வா சிகிச்சை பெற்று வருகிறார். தேசமெங்கும் தொடரும் இது போன்ற லவ்ஜிஹாத்துக்கு மத்திய அரசும் மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.