உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத் மாவட்டம் கோடா பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் அப்பகுதியிலுள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான இர்பான், அந்த சிறுமியை லவ்ஜிகாத் எனும் காதல் வலையில் வீழ்த்தினான்.சிறுமியை தனியாக அழைத்துச் சென்று ஆபாச வீடியோ எடுத்து வைத்துக்கொண்டான்.பின்னர், அந்த வீடியோவை காட்டி மாணவியை தவறாக வழிநடத்த முயற்சி செய்தான்.எனினும், மாணவி அதற்கு உடன்படவில்லை.இதுகுறித்து கடந்த சனிக்கிழமை சிறுமி கோடா காவல் நிலையத்தில் புகார் செய்தார்.ஆனால், காவலர்கள் இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனிடையே, மாணவி புகார் அளித்த விஷயம் தெரிந்துகொண்ட இர்பான், மாணவியின் ஆபாச வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தான்.இதனால் மனமுடைந்த மாணவி, தனது வீட்டில் யாரும் இல்லாத நிலையில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து இர்பானை தேடினர்.ஆனால் அதற்குள் இர்பான் மற்றும் அவனது குடும்பத்தினர் தலைமறைவாகி விட்டனர்.அவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திராபுர காவல்துறை ஆணையர் ஸ்வதந்த்ர குமார் சிங், “சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.விரைவில் கைது செயப்படுவார்கள்.விசாரணைகள் நடந்து வருகின்றன.இவ்வழக்கில் காவல்துறையினரின் அலட்சியம் குறித்தும் விசாரணை நடத்தப்படும்.காவலர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.