மத்தியப் பிரதேசத்தில் லவ் ஜிஹாத்

மத்தியப் பிரதேசத்தில் ஃபரூக் கான் என்ற ஒரு முஸ்லிம் நபர் ஒரு ஹிந்துப் பெண்ணை 2014ல் திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்தின்போது, ஒருவர் மற்றவரின் மத விஷயங்களில் தலையிடக்கூடாது என இருவரும் ஒப்பந்தம் செய்துகொண்டனர். ஆனால் திருமணத்திற்கு பிறகு நிலைமை மாறியது. ஃபரூக்கும் அவரது குடும்பத்தினரும் அந்த பெண்ணை மதமாற்றம் செய்ய வற்புறுத்தி வந்தனர். நவராத்திரி விரதத்தின்போது அவருக்கு வலுக்கட்டாயமாக இறைச்சியை ஊட்டினர். மதம் மாற சம்மதிக்காததால் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சித்ரவதை செய்யப்பட்டார். அவர்களின் இரண்டு குழந்தைகளையும் பார்க்க முடியாது, குழந்தைகளை முஸ்லிம் மதப்படிதான் வளர்ப்போம் எனவும் முத்தலாக் விவகரத்து செய்வதாகவும் மிரட்டினர். இதனையடுத்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில், ஃபாரூக், அவரது பெற்றோர்களான பீர் அலி கான் மற்றும் ஷஹீதன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களில் நடைபெற்ற மூன்றாவது லவ் ஜிஹாத் வழக்கு இதுவாகும்.