கேரளா, திருவனந்தபுரத்தில், பி.காம் படிக்கும் மாணவி ஜஸ்னா மரியா ஜேம்ஸ். கடந்த 2018, மார்ச் 22ல் தனது வீட்டிலிருந்து காணாமல் போனார். காவல்துறை விசாரணையில் முன்னேற்றம் இல்லை. சமீபத்தில், மங்களூருவில் ஒரு முஸ்லீம் கருத்தரங்கில் ஜஸ்னா காணப்பட்டார், அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று செய்திகள் வந்தன. இதனால் இது லவ் ஜிஹாத்தாக இருக்கலாம் என சந்தேகத்தால் இதை விசாரிக்க, கேரள அரசு தயங்கியது. இந்நிலையில் மாணவி காணாமல் போனது குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கு கேரள கிறிஸ்தவ அமைப்புகளை லவ் ஜிஹாத்துக்கு எதிராக தற்போது பேச வைத்துள்ளது. பா.ஜ.க கேரள மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன், நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ளார்.