கோவிட் காப்பீட்டால் நஷ்டம்

கொரோனாவுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட கொரோனா கவாச், கொரோனா ரக்ஷக் ஆகிய இரண்டு குறுகியகால காப்பீட்டுத் திட்டங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்ல பலன் அளித்தது. ஆனால், ஒவ்வொரு நோயாளியும் குறைந்தபட்சம் ஐந்து நாள்களாவது மருத்துவமனையில் இருந்தனர். இதன் காரணமாகப் பெரும்பாலான காப்பீட்டு நிறுவனங்கள் அதிகமான தொகையை மருத்துவமனைகளுக்கு செட்டில் செய்ய வேண்டியிருந்தது. இதனால் இத்திட்டங்கள் தங்களுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி உள்ளன. 3ம் அலை வரப்போவதாக கூறப்படும் சூழலில், இருதரப்பினரின் பிரச்சனைகளை ஆராய்ந்து தகுந்த நடவடிக்கையை ஐ.ஆர்.டி.ஏ.ஐ எடுக்க வேண்டும் என்று காப்பீட்டு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.