லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்படவில்லை

மது விற்பனை உரிம முறைகேடு வழக்கில், தனக்கு எதிராக ‘லுக் அவுட் நோட்டீஸ்’ வெளியிடப்பட்டுள்ளதாக, டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறியிருந்தார். இது அனைத்து ஊடகங்களிலும் பரபரப்பாக செய்தியாக்கப்பட்டது. இந்த நிலையில், மணீஷ் சிசோடியாவின் புகாருக்கு, சி.பி.ஐ மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கூறிய சி.பி.ஐ., உயரதிகாரிகள், ‘மது விற்பனை உரிம மோசடி தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி இதில் சம்பந்தப்பட்ட பலருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது.ம் ஆனால், இதுவரை யாருக்கு எதிராகவும், லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்படவில்லை” என தெரிவித்துள்ளனர். ஒரு வழக்கில் தொடர்புடையவர், வேறு நாடுகளுக்கு தப்பிவிடாமல் இருப்பதற்காக, விசாரணை அமைப்புகள் சார்பில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்படும். அனைத்து விமான நிலையங்களுக்கும் இந்த நோட்டீஸ் அனுப்பி வைக்கப்படும். எனவே, லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டவர், வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் இந்த விவகாரத்தில் வேண்டுமென்றே பொய் செய்திகளை பரப்பி அரசியல் செய்து வருகின்றனர் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.