மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், ‘பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கான பிரத்தியேகமாக 75 அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்பு மையங்களை (எஸ்.டி.ஐ) அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார். ‘இம்மையங்கள் அவர்களின் அறிவியல் திறமையை ஊக்குவிப்பதுடன் அவர்களின் சமூக பொருளாதார வளர்ச்சியிலும் பங்களிக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளில், பட்டியல் சமூகத்திற்கு 13, பழங்குடியின் சமூகத்திற்கு 7 என 20 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவை 20 ஆயிரம் பேருக்கு நேரடியாக பயனளிக்கும். அவர்களின் விவசாயப் பண்ணை, பண்ணை சாராத இதர வாழ்வாதாரத் துறைகள் உள்ளிட்ட பல்வேறு கண்டுபிடிப்புகளுக்கும் இம்மையங்கள் உதவி செய்யும். அவர்களின் முக்கிய வாழ்வாதார அமைப்புகளில் உள்ள பலவீனமான இணைப்புகளை சரிசெய்து வலிமையான சமூக அமைப்பை உருவாக்குதல், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாடு, உள்நாட்டு அறிவியல் அமைப்புகளை மேம்படுத்தவும் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தவும் தேவையான உள்ளீடுகள் வழங்குதல் என இந்த எஸ்.டி.ஐ மையங்கள் மூன்று குறிக்கோள்களைக் கொண்டிருக்கும்’ என தெரிவித்தார்.