அரசிடமிருந்து ஹிந்து கோயில்கள் விடுவிப்பு

உத்தரகண்டில் ஐம்பத்தியோரு ஹிந்து கோவில்களை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க உத்தரகண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத் முடிவு செய்துள்ளார். முன்னதாக கோயில்களின் நிர்வாகத்தை கையகப்படுத்த மாநில அரசு எடுத்த முடிவுக்கு எதிராக கடுமையான போராட்டங்களுக்கு பின்னர் இந்த முடிவு கிடைத்துள்ளது. முன்னாள் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்தின் நிர்வாகத்தின் போது மாநிலத்தில் கோயில்களை நிர்வகிக்க 2020 ஜனவரியில் உத்தரகண்ட் சார் தாம் தேவஸ்தானம் வாரியம் அமைக்கப்பட்டது. யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் மற்றும் 51 கோயில்களின் நிர்வாகத்தை மேற்பார்வையிட மாநில அரசு சார்தாம் ஆலய மேலாண்மை வாரியம் சட்டம் 2019ஐ இயற்றியது. இந்த முடிவுக்கு கோயில் பூஜாரிகள், பொதுமக்கள் என பலரும் எதிர்த்தனர். முதல்வர் தீரத் சிங் ராவத்தின் இந்த முடிவு, பாரதம் முழுவதும் மதச்சார்பற்ற அரசின் கட்டுப்பாட்டிலிருந்து ஹிந்து கோயில்களை விடுவிப்பதற்கான மக்கள் இயக்கம் வலுவடைந்து வரும் சூழலில் அமல்படுத்தப்பட்டது. தற்போது இந்த முழுச் சட்டத்தையும் மறுஆய்வு செய்வதாகவும், 51 கோயில்களை இந்தச் சட்டத்திலிருந்து வெளியே கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று  தனது பிறந்த நாளில் தீரத் சிங் ராவத் அறிவித்துள்ளார். பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் தமிழகத்திலும் கோயில்கள் அரசின் பிடியில் இருந்து விடுவிக்கப்படும் என உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.