தங்க நகரம் கண்டுபிடிப்பு

பிரமிடுகள், மம்மிகள் உள்ளிட்ட பல வரலாற்றுப் பொக்கிஷத்தை தன்னகத்தே கொண்ட நாடு எகிப்து. இங்கு தோண்டத்தோண்ட பல அதிசயங்கள் கிடைத்துக் கொண்டே வருகின்றன. இந்நிலையில், தற்போது புதையுண்டு போன ஒரு தங்க நகரத்தை எகிப்திய தொல்பொருள் ஆய்வுக் குழு கண்டறிந்துள்ளது. இது சுமார் 3,000 ஆண்டுகள் பழமையான நகரம் எனக் கூறப்படுகிறது. 2020ஆம் ஆண்டு செப்டம்பரில் அகழ்வாராய்ச்சி தொடங்கிய நிலையில், இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பழங்கால ஆசிய பாரம்பரியத்தை சேர்ந்த சான்றுகள், தொழிலாளர்கள் வாழ்ந்த வீடுகள், சமையலறை, உலோகம், கண்ணாடி உற்பத்தி தொடர்பான பொருட்கள், நிர்வாக கட்டடங்கள், பாறைகளாலான கல்லறை உள்ளிட்டவைகளும் கண்டறியப்பட்டுள்ளன.