ஆகஸ்ட் 15ம் தேதி பாரதத்தின் 74வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதை மத்திய அரசு கொரோனா கட்டுப்பாடுகளுடன் கொண்டாட திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில், ‘பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட தேசியக் கொடிகளுக்கு காகிதம் போல மக்கும் தன்மையில்லை என்பதோடு, பயன்பாட்டுக்கு பிறகு உரிய மரியாதையுடன் பிளாஸ்டிக் கொடிகள் அப்புறப்படுத்துவதை உறுதி செய்வதிலும் நடைமுறை சிக்கல் உள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர, தேசியக் கொடி அச்சிடப்பட்ட மாஸ்க் உள்ளிட்டவற்றையும் தவிர்த்து தேசியக் கொடிக்கு உரிய மரியாதையை நாம் செலுத்துவோம்.