சென்னை வில்லிவாக்கத்தில், தனியாக வசித்த முதியவரின் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை அபகரிக்க முயன்ற வழக்கில் விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர் தயாள மூர்த்தி, அம்பிகா, சுமதி, சினேகலதா உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, காஞ்சிபுரத்தில் டிராவல்ஸ் உரிமையாளரிடம் இருந்து 2 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அபகரித்த தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசன், சந்தோஷ் கார்த்திக், சரவன பெருமாள் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.