புலம்பும் அக்ஸஸ் நவ்

சட்டவிரோத விஷயங்களை, புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும்.  அரசு மற்றும் நீதிமன்றங்கள் கேட்கும் தகவல்களை சமூக வலைதளங்கள் தர மறுத்தால் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் போன்ற சமூக வலைதளங்கள், ஓ.டி.டி தளங்களுக்கான புது விதிமுறைகளை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இதனையடுத்து ‘சமூக ஊடகத் தளங்கள், ஆன்லைன் ஊடக தளங்கள் போன்றவை இவைகளை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்? புதிய விதிகள் இணைய தளங்களை அதிக தணிக்கை செய்ய கட்டாயப்படுத்தும். நிரூபிக்கப்படாத ஆர்டிபிஷியல் இண்டிலிஜெண்ட் (AI) அடிப்படையிலான உள்ளடக்க ஒழுங்குமுறை கருவிகள் இதற்கு தேவைப்படும், ஏராளமான பயனர் தரவுகளை அரசுக்கு வழங்க வேண்டியிருக்கும். இணைய பாதுகாப்பு, தனிநபர் உரிமை பறிபோகும்’ என அக்சஸ் நவ் எனப்படும், ஒரு மேற்கத்திய வக்கீல் குழு, அரசின் சமூக ஊடக விதிமுறைகளுக்கு எதிராக புலம்பியுள்ளது. இந்த நிறுவனம் சுவிஸ் பெடரல் வெளியுறவுத் துறை, ட்விட்டர், முகநூல், ஓக் அறக்கட்டளை, போர்டு அறக்கட்டளை போன்ற நிறுவனங்களிடம் இருந்து ஏரளமான நிதியை பெற்றுள்ளது. இவை இங்கு இனி சுதந்திரமாக விஷமக் கருத்துகளை பரப்ப முடியாது என்பதால் தங்கள் குரலாக அக்ஸஸ் நவ்வை பயன்படுத்துகின்றன.