லாலு பிரசாத் குற்றவாளி

பிஹார் முதல்வராக லாலு பிரசாத் பதவி வகித்த காலத்தில் கால்நடை தீவனத்தில் பல கோடி ரூபாய் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ 64 வழக்குகளை பதிவு செய்தது. இதில் லாலு பிரசாத் மீது மட்டும் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவ்வழக்கை விசாரித்த சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2013ல் லாலு பிரசாத் குற்றவாளி என முதல் வழக்கில் தீர்ப்பளித்தது. இப்படி அடுத்தடுத்த நான்கு வழக்குகளிலும் அவர் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். உடல்நலக் குறைவால் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. இந்நிலையில் ராஞ்சி தோரந்தா கருவூலத்தில் இருந்து ரூ. 139 கோடி பணப் பரிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் இன்று ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியுள்ளது. லாலு பிரசாத் உள்ளிட்ட 75 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்களை பிப்ரவரி 18ம் தேதி நீதிமன்றம் அறிவிக்கும் என தெரிகிறது.