தொ.மு.ச அடாவடி

தி.மு.க., ஆட்சிக்கு வந்தது முதல், காவல் நிலையம், அரசு அலுவலகங்கள், வணிகர்கள், பொதுமக்கள் என அனைத்து இடங்களிலும் அவர்களது கட்சியினர் செய்யும் அடாவடிகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. அவ்வகையில், தி.மு.க தொழிற்சங்கமான தொ.மு.ச நிர்வாகிகள், அதிகாரிகளை மிரட்டுகின்றனர். மற்ற தொழிற்சங்கத்தினரை தங்களது சங்கத்தில் இணைய வற்புறுத்துகின்றனர். சந்தா செலுத்தாவிட்டால் பணி இல்லை என மிரட்டி கட்டாய உறுப்பினராக மாற்றுகின்றனர். மாறாதவர்களுக்கு பணி அளிப்பதில்லை, பொய் புகாரில் மெமோ வழங்கப்படுகிறது. சம்பளம் கிடைக்காமல் செய்கின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. இதற்கு உடன்படாதவர்களின் பட்டியலைப் பெறும் கிளை மேலாளர்கள், தொழிலாளர்களுக்கு, ஒரு மாதமாக பணி வழங்காமல் இழுத்தடிக்கின்றனர்.

இதனால், சம்பளத்துக்கு வழியில்லாத ஊழியர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.இது குறித்து, பஸ் ஊழியர்கள் கூறியதாவது: தி.மு.க., ஆட்சிக்கு வந்தது முதல், கிளை மேலாளர்கள் ஆளுங்கட்சியினர் போலவே செயல்படுகின்றனர். தொழிலாளர்களிடம் பிரிவினையை உருவாக்குவது போல் செயல்படுவதோடு, பொய் புகார்களைக் கூறி, ‘மெமோ’ வழங்குகின்றனர். மூன்று வாரங்களாக பணி இல்லாமல் சென்னை, பூந்தமல்லி பணிமனையில் ஓட்டுனராக பணிபுரியும் சரவணன் என்பவர் தீக்குளிக்க முயன்று, சக தொழிலாளர்களால் காப்பாற்றப்பட்டார். அவரது புகாரில் இதுவரை காவலர்களோ அரசோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே தொ.மு.சவின் அராஜகத்துக்கு அத்தாட்சி.