கிரீடா ஞான பரிக்ஷா

கிரீடபாரதி அமைப்பு, விளையாட்டின் மூலமாக நாட்டின் மக்களிடையே தேசபக்தி, ஆரோக்கியம், நல்லொழுக்கம், கட்டுப்பாடு போன்ற நல்ல பழக்கங்களை வளர்க்க பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது. இதில் ஒரு அங்கமாக விளையாட்டு அறிவு திறனை வளர்க்க ஆன்லைன் மூலமாக விளையாட்டு அறிவு திறன் தேர்வு நாடு முழுவதும் ஒரே நேரத்தில் ஆகஸ்ட் மாதம் 21 ஞாயிறு காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த நிகழ்வினை ஜூலை மாதம் 20ம் தேதி மத்திய விளையாட்டுதுறை அமைச்சர் அனுராக் தாகூர் துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்கு முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும் பதிவு கட்டணம் ரூபாய் 20. தேர்வு எழுத அனைத்து வயதினரும் தகுதி ஆனவர்களே. பரிசு 12 வயது முதல் 25 வயது உட்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இதில், முதல் பரிசாக ரூ. ஒரு லட்சம் (ஒருவருக்கு), இரண்டாம் பரிசாக ரூ. 50 ஆயிரம் (இருவருக்கு), மூன்றாம் பரிசாக ரூ. 25 ஆயிரம் (மூன்று நபர்களுக்கு), நான்காம் பரிடசாக ரூ. 5,000 (11 நபர்களுக்கு) வழங்கப்படும். பரிசு வென்றவர்களுக்கு டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் மூலமாக பரிசுகள் வழங்கப்படும். மேலும், பங்கேற்கும் அனைவருக்கும் பங்கேற்பாளர் சான்றிதழ் வழங்கப்படும். தேர்வு எழுத இணைய வசதியுடன் கூடிய ஆண்ட்ராய்டு அலைபேசி இருந்தாலே போதுமானது. பதிவு செய்தவுடன் ஐந்து ட்ரையல் டெஸ்ட் இருக்கும். இறுதி தேர்வு எழுதும் பொழுது குடும்பத்தார் ஆசிரியர்கள், நண்பர்கள் உதவியுடன் வீட்டில் இருந்தபடியே தேர்வை எழுதலாம். பதிவு செய்யும் இணைப்பை பெறுவதற்காக 7891669166 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்கவும். அதிகமானோர் மொத்தமாக பதிவு செய்ய விரும்பினால் பல்க் ரிஜிஸ்ட்ரேஷன் செய்ய மற்றும் விவரங்களுக்கு 9566883398 தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.