கவர்னரிடம் கிருஷ்ணசாமி மனு

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக ஆளுனரிடம் அளித்துள்ள மனுவில், ‘முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், அவரும், அவரது அமைச்சர்களும், இந்திய அரசை, ‘ஒன்றிய அரசு’ என அழைக்கின்றனர். அவர்களின் செயல்பாடுகள் தேசத்திற்கு எதிராக உள்ளன. சட்டசபையில் நீங்கள் படித்த கவர்னர் உரையில் ஒன்றிய அரசு என்று உள்ளது. இது, நாட்டின் இறையாண்மை மீதான பிடியைக் குறைக்கிறது. சுதந்திர போராட்ட வீரர்களை காயப்படுத்துவதாக உள்ளது. தி.மு.க, ஏற்கனவே 1962 சீனா போரின் போது, ‘திராவிட நாடு’ கோரியது. எனவே, சட்டசபை ஆவணங்களை வரவழைத்து, அதில் இந்தியஅரசு என்று குறிப்பிட வேண்டிய இடத்தில் உள்ள, ஒன்றிய அரசு என்ற வார்த்தையை நீக்குங்கள். ஸ்டாலினும் அவரது சகாக்களும், ஒன்றிய அரசு என்ற வார்த்தையை மீண்டும் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. அதற்கு உடனே முற்றுப்புள்ளி வையுங்கள்’ என கோரிக்கை வைத்துள்ளார்.