கோவேக்சின் புதிய ஆலை

மத்திய சுகாதாரம், குடும்ப நலன், இரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ஆகஸ்ட் 29ல் குஜராத் மாநிலம், அன்கலேஷ்வரில், பாரத் பயோடெக் நிறுவனம் புதிதாக துவங்கியுள்ள சிரோன் பெஹ்ரிங் தடுப்பூசி மருந்து தயாரிப்பு ஆலையில் தயாரிக்கப்பட்ட கோவாக்ஸின் முதல் வணிகத் தொகுப்பை வெளியிட்டார். பாரத் பயோடெக் ஏற்கனவே ஹைதராபாத், மாலூர், பெங்களூரு, புனே உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி உற்பத்தியை செய்து வருகிறது. பிரதமரின் தொலைநோக்கு பார்வை, சீரிய முயற்சிகளின் காரணமாக பாரதம் தனது முதல் உள்நாட்டு தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. உலகளாவிய அளவில் பாரதம் மிகப்பெரிய தடுப்பூசி திட்டங்களில் ஒன்றை செயல்படுத்தி வருகிறது. பாரத் பயோடெக், ஜைடஸ் காடிலா ஆகிய இரண்டு நிறுவனங்களின் தடுப்பூசிகளின் ஆராய்ச்சி, உற்பத்தி பாரதத்திலேயே முழுமையாக செயல்வடிவம் பெற்றது நமக்கெல்லாம் பெருமை அளிக்கிறது என அமைச்சர் குறிப்பிட்டார். தனது 100 கோடி தடுப்பூசி மருந்துகள் தயாரிப்பு என்ற இலக்கை எட்டும் விதத்தில் பாரத் பயோடெக் செயல்படுவதாக பாரத் பயோடெக் தலைவர் கிருஷ்ணா எல்லா தெரிவித்தார்.