ராமஜென்ம பூமியில் கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், நேற்று அயோத்தியில் உள்ள ஸ்ரீராம ஜென்மபூமியில் உள்ள ஸ்ரீராமரை தரிசித்து பிரார்த்தனை செய்தார். மேலும் டெல்லி அரசின் இலவச யாத்திரைத் திட்டத்தில் கோயில் நகரமான அயோத்தியை தனது அரசு சேர்க்கும் என கூறினார். இவர்தான் முன்பு, அயோத்தியில் ஸ்ரீராமருக்கு கோயில் அமைப்பதற்குப் பதிலாக பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தவர். டெல்லியில் முஸ்லிம்களின் போராட்டத்தின்போது மறைமுக ஆதரவு அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் இந்த திடீர் மனமாற்றத்திற்கு, உத்தர பிரதேசத்தில் விரைவில் நடக்க உள்ள தேர்தலில் இவரின் கட்சி போட்டியிட உள்ளதே காரணம் என கூறப்படுகிறது.