நித்யானந்தா, கைலாசா எனும் தனித் தீவு நாட்டை வாங்கி அங்கே குடியேறிவிட்டதாக இணையதளத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது நித்யானந்தாவின் கைலாசா நாட்டை இறையான்மை பெற்ற நாடாக அமெரிக்காவின் நெவார்க் நகர நிர்வாகம் அங்கீகரித்து இருக்கிறது. மேலும், இருதரப்பு மக்களின் மேம்பாட்டுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்கள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது. நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள நிவார்க் நகரத்தின் சார்பில் அதன் மேயரும் கைலாசா நாட்டின் தூதரான விஜயப்பிரியா நித்யானந்தாவும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்ததில் கையெழுத்திட்டனர். இதுகுறித்து டுவிட்டரில் கருத்துப்பதிவிட்ட நித்யானந்தா, “ஜனவரி 11, 2023 – ஹிந்து மதத்தின் அதிபதி (SPH) பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களின் அனுசரணையின் கீழ், கைலாசா ஐக்கிய மாகாணங்கள் மற்றும் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள நெவார்க் நகரம், ஒரு நெறிமுறை இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன” என தெரிவித்துள்ளார்.