நாளந்தா குறித்து கே கே முகமது

அயோத்தியில் சர்ச்சைக்குரிய கட்டடம் கட்டப்படுவதற்கு முன் அங்கு ராமர் கோயில் இருந்ததை அறிவித்த புகழ்பெற்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கே.கே முகமது, சமீபத்தில் கலந்துகொண்ட ஒரு இணையவழி நிகழ்ச்சியில், ‘நாளந்தா பல்கலைக் கழகம், ஸ்ட்ராஸ்பர்க், ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் போன்ற நவீன பல்கலைக்கழகங்களை விட இது மிகப் பெரியது மற்றும் மிகவும் பழமையானது. அங்கு மாணவர்கள் இந்திய துணைக் கண்டத்தில் இருந்து மட்டுமல்ல, ஜப்பான், சீனா, இந்தோனேசியா, மலேசியா போல பல நாடுகளிலிருந்து வந்தார்கள். ஹுவான் சுவாங் நாலந்தா பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகள் படித்தார். அவர் அங்கு ஆசிரியரும் ஆனார். சுமந்திராவின் அரசர் நாளந்தாவின் நூலகத்திற்காக மட்டும் நான்கு கிராமங்களை நன்கொடையாக வழங்கினார். இந்தோனேசியா மன்னர் ஒருவரால் பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஒரு மடம் கட்டப்பட்டது. குப்தப் பேரரசின் பொற்காலம் எனப்படும் 5, 6 ஆம் நூற்றாண்டுகளில் நாளந்தா வளர்ந்தது. இந்த பல்கலைக்கழகம் பக்தியார் கால்ஜியால் 1193ல் கொள்ளையடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. மூன்று முறை அழிக்கப்பட்டது ஆனால் இரண்டு முறை மட்டுமே மீண்டும் கட்டப்பட்டது. நாளந்தா பல்கலைக்கழகம் அழிக்கப்பட்டதால், பல நூற்றாண்டுகளில் திரட்டப்பட்ட அறிவையும் ஞானத்தையும் நாம் இழந்துவிட்டோம். இந்த பல்கலைக்கழகம் செயல்பட அனுமதித்திருந்தால் பாரதம் சாதித்திருக்கும் அறிவியல் முன்னேற்றத்தை யாராலும் கணிக்க முடியாது. எனவே நீங்கள் நாளந்தாவின் மண்ணில் நடக்கும்போது, அந்த மண்ணில் பல ஞானிகளும் மேதைகளும் வாழ்ந்ததை நினைவில் கொள்ள வேண்டும்’ என கூறினார்.