சுற்றுலா குறித்த பல்வேறு தலைப்புகளில் ‘நமது தேசத்தை காணுங்கள்’ முன்முயற்சியின் கீழ் பல்வேறு வலையரங்குகளை சுற்றுலா அமைச்சகம் ஏற்பாடு செய்து வருகிறது. அவ்வகையில், ‘சுற்றுலா வழிகாட்டிகளுடன் 75 இடங்கள்’ என்ற நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, ‘மகாராஷ்டிராவின் ஜோதிர்லிங்க கோயில்கள்’ என்ற தலைப்பில் டிசம்பர் 11, 2021 அன்று வலையரங்கு நடத்தப்பட்டது. பிரபலமான ஆன்மீக சுற்றுலா தலங்கள் மகாராஷ்டிராவிலும் ஏராளமாக உள்ளன. திரிம்பகேஷ்வர், பீமாசங்கர், பரலி வைஜ்நாத், கிரிஷ்ணேஸ்வர் மற்றும் அவுந்த் நாக்நாத் ஆகியவை மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள முக்கிய ஜோதிர்லிங்கங்கள் ஆகும். https://www.youtube.com/channel/UCbzIbBmMvtvH7d6Zo_ZEHDA/featured எனும் இணைய முகவரியில் இந்த வலையரங்குகளை காணலாம். தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரம் உட்பட ஜோதிர்லிங்க வடிவில் சிவபெருமான் உள்ள 12 ஆலயங்களும் பழங்காலத்திலிருந்தே போற்றி வழிபடப்படுகின்றன. இக்கோயில்கள் புராணங்களுடன் நெருங்கிய தொடர்புடையவை, வரலாறு மற்றும் பாரம்பரியம் நிறைந்தவை ஆகும்.