இணையதள தொலைக்காட்சியில் மனிதநேயம், மதநல்லிணக்கம் குறித்து பேசிய பள்ளி மாணவர் ஏ.அப்துல் கலாமின் பெற்றோருக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் வீடு வழங்கினார். அந்த சிறுவனின் வயதுக்கும் பேச்சுக்கும் சம்பந்தமே இல்லை. அது யாரோ எழுதிக் கொடுத்தது என அப்போதே பல விமர்சனங்கள் வந்தன. இந்நிலையில், அந்த விமர்சனங்களை மெய்பிக்கும் வகையில், அந்த மாணவன் சினிமாவில் நடிக்கும் ஜூனியர் ஆர்டிஸ்ட் என்ற செய்தி தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. முன்னதாக, அந்த சிறுவனின் குடும்பத்துக்கு ஸ்டாலின் அளித்த வீடு, ‘பிரதமரின் அனைவருக்கும் வீடு’ திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது. அதனைதான் ஸ்டாலின் தனது தி.மு.க ஸ்டிக்கரை ஒட்டி வழங்கி இருக்கிறார் என்ற செய்தியும் வெளியானது குறிப்பிடத்தக்கது.