பத்திரிகையாளர்கள் போராட்டம்

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, சமீபத்தில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் தி.மு.க ஆதரவு யூடியூப் சேனல் நிருபர் ஒருவர், தான் சார்ந்த கட்சிக்கு விசுவாசமாக தேவையற்ற கேள்விகளை எழுப்பினார். அதற்கு, அண்ணாமலை ‘அண்ணா உங்க 200 ரூபாய் வந்திடும் அண்ணா, சரி 300 ஆக வாங்கிக்கோங்க அண்ணா…’ என கூறி, இத்தகைய சார்பு ஊடகங்களின் உண்மைத் தன்மையை தோலுரித்து காட்டினார். இதனையடுத்து கோபமடைந்த சார்பு ஊடகத்தினர், அண்ணாமலைக்கு எதிராக இரண்டு இடங்களில் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், “இரண்டு போராட்டங்கள்! இரண்டும் சென்னை பிரஸ் கிளப் பெயரில். இதில் எது உண்மையான பிரஸ் கிளப்? என்னிடம் கேள்வி கேட்ட சகோதர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதை அறிந்தேன். அவரை வைத்து தி.மு.கவிடம் நல்ல பெயர் எடுக்க ஆர்ப்பாட்டம் செய்து உள்ளனர். அதிக அளவில் செய்தியாளர்களை கூட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுக்கு தான் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தினை தி.மு.க வழங்கும் என எதிர்பார்கின்றேன். விமலேஷ்வரனா? பாரதி தமிழனா? அணிகள் கைப்பற்ற போவது சென்னை பத்திரிகையாளர் மன்றத்தினை. அரசியல் விளையாட்டுக்களை பொறுத்திருந்து பார்ப்போம். எனது பேச்சு நியாயம் என்று கருதி போராட்டத்தினை புறக்கணித்த உண்மை செய்தியாளர்களுக்கு மிக்க மிக்க நன்றிகள்” என தெரிவித்துள்ளார். ஊடகங்களையும் ஊடகத்தினரையும் இதற்கு மேல் தரம் தாழ்ந்து விமர்சிக்க முடியாது எனும் வகையில் மிகவும் கேவலமாக விமர்சித்த தி.மு.கவினரான ஆர்.எஸ் பாரதி, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் குறித்து வாய் திறக்க துணிவில்லாத இவர்கள், மிகவும் மரியாதையாகவும் தன்மையுடனும் அண்ணாமலை உண்மையை எடுத்துரைத்தார் என்றபோதிலும் அதற்கு எதிர்வினையாற்றுவது  இவர்கள் வெங்காயத்தின் எத்தனையாவது லேயரில் உள்ளனர் என்பதையே எடுத்துக் காட்டுகிறது என மக்கள் கருதுகின்றனர்.