இத்தாலியின் ரிமினி நகரில் உள்ள ஒரு புலம்பெயர்ந்தோருக்கான காப்பகத்தில் வசிக்கும் சோமாலிய நபர் ஒருவர், போதை பொருளை உட்கொண்டிருந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று ஒரு பேருந்தில் டிக்கெட் இல்லாமல் பயணத்தார். டிக்கெட் பரிசோதனைக்கு வந்தபோது, அவர் திடீரென இரண்டு டிக்கெட் பரிசோதகர்கள், 6 வயது சிறுவன், 4 பெண்களை கத்தியால் குத்திவிட்டு தப்பித்தார். காவலர்கள் அவரை கைது செய்து, இது ஜிஹாதி கொலை முயற்சியா என விசாரித்து வருகின்றனர். முன்னதாக அந்த நபர், 2015ல் ஐரோப்பாவிற்கு வந்தார். அவரின் அகதி கோரிக்கையை டென்மார்க், சுவீடன், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகள் மறுத்திருந்தன. இத்தாலிய உள்துறை அமைச்சர் லமோர்ஜெஸ் இதனை “மிகவும் மோசமான நிகழ்வு” என்று குறிப்பிட்டார். சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் வலதுசாரி தலைவர் மேட்டியோ சால்வினி லமோர்ஜீஸின் கோரியுள்ளார்.