ஜெய்சங்கரின் ஈரான் பயணம்

புதிய ஈரானிய அதிபராக அயதுல்லா சையித் இப்ராகிம் ரைசி பதவி ஏற்பதை முன்னிட்டு, ஆகஸ்ட் 5, 6 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் பயணமாக பாரத வெளியுறவுத்துறை அமைச்சகர் ஜெய்சங்கர் ஈரானுக்கு சென்றுள்ளார். முன்னதாக, மாஸ்கோ செல்லும் வழியில் கடந்த ஜூலை 7ல் ஜெய்சங்கர் டெஹ்ரானுக்குப் திடீர் விஜயமாக ஈரான் சென்று பாரதம் ஈரானுக்கு இடையேயான தூதரக உறவுகள் குறித்து பேச இப்ராகிம் ரைசியை சந்தித்தார் என்பது குறிப்பிட்த்தக்கது. ஒருபுறம் அமெரிக்கா ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதித்துள்ளது. மறுபுறம் தற்போது, ஆப்கனில் தற்போது போர் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், தலிபான்களிடம் செல்வாக்குப் பெற்ற ஈரானை நமது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பது உலக அரங்கில் உற்று நோக்கப்படுகிறது.