நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்ற தி.மு.க எம்.பியான தயாநிதிமாறன், “பிரதமர், குடியரசு தலைவர், பாதுகாப்புத்துறை அமைச்சர், உள்துறை அமைச்சர் உள்ளிட்டோர் கொரோனா தடுப்பு மருந்தை போட்டுக்கொண்டு நாட்டு மக்களுக்கு நம்பிக்கையளிக்க வேண்டும்” என பேசினார். இதற்கு பதில் அளித்த பா.ஜ.க எம்.பி தேஜஸ்வி சூர்யா, “இது பழைய பாரதமாக இருந்திருந்தால் அவ்வாறு நடந்திருக்கும். இது புதிய பாரதம். இங்கே முன்களப் பணியாளர்கள், மருத்துவர்கள், துப்புரவுப் பணியாளர்களுக்குத்தான் முன்னுரிமை என விதிமுறை இருக்கும்போது அதுவே பின்பற்றப்படும். இதுவே பழைய பாரதமாக இருந்திருந்தால் தயாநிதிமாறனின் தாத்தா, பாட்டி, ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் முதலில் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால் இது புதிய பாரதம். எனவே இங்கே தங்களுடைய முறையை மீறி அரசியல்வாதிகளுக்கு தனிப்பட்ட முறையில் முன்னுரிமை காட்டப்படாது” என்று பேசினார்.